காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள்! கல்வித்துறை முடிவு

Must read

சென்னை,

சிரியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் முடங்கின. இதன் காரணமாக காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதையடத்து,  மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு  காலாண்டு விடுமுறை தினங்களில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த  பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நீட் போன்ற பொதுத்தேர்வுகள் தமிழக மாணவர்கள் மிரட்டி வரும் சூழலில், ஆசிரியர்க ளின் போராட்டம் காரணமாக பொதுத் தேர்வை எதிர்நோக்கி உள்ள மேல்நிலைக் கல்வி மாணவர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து,  அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு மற்றும் நீட் போன்ற பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வரும் 22ந்தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு விடுமுறை நாட்களில் தினசரி அரை நாள் சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article