சென்னை

மிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

 

தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்தது.  அதில் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.   தற்போது சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை மற்றும் அடுத்த மாதம் மகர விளக்கு திருவிழா நடைபெற உள்ளது.  இங்கு செல்ல பக்தர்களுக்கு வசதியாகத் தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்து சேவைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

அவ்வகையில் இந்த வருடம் தினசரி 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.    அதையொட்டி இன்று முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் சேவை தொடங்க உள்ளன.

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் www.tnstc.in மற்றும் தனியார் பேருந்து முன்பதிவு தளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.    இந்த முன்பதிவு 30 நாட்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ள முடியும்.  இந்த விவரங்கள் குறித்த தகவல்களுக்கு 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.