சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, மாதவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு தலா 2 ஆம்புலன்சும், மற்ற 13 மண்டலங்களுக்கும் தலா 3 ஆம்புலன்கள் என மொத்தம் 42 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.