சபாநாயகர் தனபால் அப்பல்லோவில் அனுமதி!

சென்னை,

மிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் வயிற்றுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவு  தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் சென்னை அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள சபாநாயகர் தனபாலை நலம் விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.பின்னர் மாலையிலிருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாகவும்,  காய்ச்சல் மற்றும்  கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரின் உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

அப்பல்லோவில் சபாநாயகர்   தனபால் 4வது தளத்தில் 407வது வார்டில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது..

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகரும், துக்ளக் ஆசிரியருமான சோ ஆகியோர் உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
Speaker Dhanapal admitted in Apollo Hospital!