சென்னை,

திமுக ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக டிடிவி தினகரனை சந்தித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மூவர் அணியான அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர், தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் எந்த அணிக்கு ஆதரவு தருவது என தீவிர ஆலோசனையில் எம்எல்ஏக்கள் விடுதியில்  ஈடுபட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, மூவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆளாகி விடக்கூடாது என்றும், டிடிவி தினகரனை அழைத்து பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், டிடிவி ஆதரவாளர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வின் தியாகத்தை கொச்சை படுத்துவதுபோல் தற்போதைய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக நலனை பாதுகாக்க வேண்டிய அரசாக, ஜெயலலிதாவின் அரசாக செயல்பட வேண்டும் என்றனர்.

மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும்  சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வ ராக பதவி வகிப்ப வர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலாவை கட்சியில் இருந்து  நீக்க முயற்சி எடுப்பது சரியல்ல என்றும்,

10 எம்.எல்ஏக்களை வைத்திருந்த ஓ.பி.எஸ் அணிக்கு உரிய மரியாதை அளித்த பழனிசாமி, 22 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள தினகரன், சசிகலாவை நீக்க முடிவெடுப்பது தவறு.

கருத்து வேறுபாடுகளை மறந்து தினகரன் அணிக்கு உரிய முக்கியத்துவம் அளித்து இந்த அரசை முழுமையாக 5 ஆண்டுகள் நீட்டிக்க செய்ய வேண்டும்.

சசிகலா, தினகரனை நீக்கி கட்சி நடத்துவது என்பது ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களின் கருத்துக்கு எதிரானது

பாரதியஜனதாவின் அரசியல் சூழ்ச்சிக்கு ஆட்சியாளர்கள்  பலியாகிவிடக்கூடாது என்றும், பாரதிய ஜனதாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆட்சி நடத்தக்கூடாது என்றும் கூறினர்.

மேலும், டிடிவி தினகரனை அழைத்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், யாருக்கு ஆதரவு அளிப்பது  என்பது குறித்து அப்போது கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று  கருணாஸ், தமீம் அன்சாரி,  தனியரசு ஆகியோர் கூறினார்.

இவர்கள் 3 பேரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பை பார்க்கும்போது, இந்த 3 பேரும் டிடிவியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.