பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஆர்.கே.வி ஸ்டுடியோஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவரது மனைவி சாவித்ரி, கே.ஜே.யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி பிரபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய எஸ்.பி.பி, தன்னுடைய முதல் பாடல் பதிவு செய்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதல் முறையாக பாடல் பதிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அன்று அவரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு அழைத்து செல்லவதற்கு வரவிருந்த கார் வரவில்லை. எஸ்.பி.பி’யோ மதியம் 2:00 மணிக்கு ரெக்கார்டிங் அரங்கில் இருக்கவேண்டும், அவரை அழைத்து செல்ல கார் அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டு அவருக்கு கார் வரவில்லை என்பதால் அவர் நிராகரிக்கப்பட்டாரோ என சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.
அப்போது அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த அவருடைய நண்பர் விரக்தியில் இருந்த எஸ்.பி.பி’யை ஆறுதல் கூறினார். பின்னர் இருவரும் அவர்களுடைய சைக்கிலில் விஜயா ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளனர். ஸ்டுடியோவிற்கு வெளியே காவலுக்கு இருந்த வாட்ச்மேனிடம் எஸ்.பி.பி ரெக்கார்டிங்கிற்கு வந்துள்ளார் என்று சொல்ல, அந்த வாட்ச்மேன்னோ ஏன் நடிக்க வரவில்லையா என கேலிசெய்துள்ளார்.
அப்போது எஸ்.பி.பி அந்த அசிங்கத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடலாம் என்று அவருடைய நண்பரிடம் கூற, அப்போது அவருடைய நண்பர் அந்த வாட்ச்மேனிடம் அவர்கள் வந்த இரு சைக்கிள்களையும் மற்றும் எஸ்.பி.பி அவர்களையும் அடகு வைத்துவிட்டு அவர் மட்டும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குள் சென்றார். உள்ளே சென்று விஷயத்தை சொல்ல பிறகு எஸ்.பி.பி உள்ளே அழைக்கப்பட்டார். அன்று தான் அவருடைய முதல் பாடல் பதிவு செய்யப்பட்டது.