மாஸ்கோ,
ஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியில், ரஷ்ய மொழியில் பாடல் பாடி அசத்தினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் தீபாவளி பண்டிகையையொட்டி எஸ்.பி.பி.யின்  பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி பாடல்களுடன் ரஷ்யமொழி பாடல்களும் பாடி ரஷ்ய நாட்டு மக்களையும் கவர்ந்தார்  எஸ்.பி.பி..

அவருடைய பாடலுக்கு ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த  நடனப் பள்ளி மாணவர்கள் பல்வேறு நடனங்கள் ஆடியது நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது.

இந்தியாவை சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு இரண்டாவதாக கிரெம்ளின் மாளிகையில் இந்தியாவை சேர்ந்த எஸ்.பி.பியின்  இசை நிகழ்ச்சி நடைபெறுவது வரலாற்று பதிவாகும்.
அவரது ரஷ்யமொழி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யமொழியில் எஸ்.பி.பி. பாடிய வீடியோ…..