பிரபல ஸ்பானிஷ் நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது குடும்பமே பலியாகி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குடும்பத்தினர் பலியாகி உள்ளனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் நியூயார்க்கின் ஹட்சன்  ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர், இது ஒரு பெரிய நீர் மீட்பு நடவடிக்கையைத் தூண்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் அந்த  ஹெலிகாப்படரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்: விமானி மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பம். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் பின்னர் அவர்களின் காயங்களால் இறந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் Siemens நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மொண்டல் மற்றும் 4, 5 மற்றும் 11 வயதுடைய அவர்களது மூன்று குழந்தைகளுடன் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 36 வயதான விமானியும் உயிரிழந்தார்.

சீமென்ஸ் உலகளவில் கிளைகள் கொண்ட பிரபல ஜெர்மானிய பொறியியல் நிறுவனம் ஆகும். கொல்லப்பட்ட சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த தருணத்தின் கடைசி நிமிட வீடியோவும் வெளியாகி உள்ளது.