‘பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து, கார்த்தி – சத்யராஜ் – ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.

தற்போது இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.