மாஸ்கோ:

ஜெர்மனிக்கு எதிரான 2வது உலகப் போரில் வெற்றி பெற்ற தினத்தை சோவியத் யூனியன் நாடுகள் கொண்டாடடின.

2வது உலகப் போரின் போது 1945ம் ஆண்டு மே 9ம் தேதி ஜெர்மனியின் நாசி படைகள் சரணடைந்தன. இந்த தினத்தை வெற்றி தினமாக சோவியத் யூனியன் நாடுகள் கொண்டாடி வருகின்றன. ரஷ்யா மற்றும் காமன்வெல்த் தனி நாடுகள் 73வது ஆண்டு வெற்றி தினத்தை  கோலாகலமாக கொண்டாடின.

இதில் அங்கம் வகிக்கும் கசகஸ்தான் நாட்டிலும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தினம் கொண்டாடப்பட்டது. 2வது உலகப் போரில் கலந்துகொண்ட வீரர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் போர் நினைவு சதுக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.