சென்னை:  தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூ.145  குறைந்துள்ள நிலையில், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மேலும் குறைய வேண்டும் என பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.

சரவன் தங்கம் ரூ.57ஆயிரம் தொட்ட நிலையில், இன்று சென்னையில் 22 காரட்டில் 916 kdm ஹால்மார்க் தங்கத்தின் இன்றைய சரியான விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்பனையாகிறது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில்   ஏற்றம் கண்டு வந்தது. நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் உயர்ந்த நிலையில், குறையும்போது நூற்றுக்கணக்கில் மட்டுமே குறைந்து வந்தது. இந்த விலையேற்றம் பெண்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 19ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 885க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 80க்கும் விற்பனையானது.

இந்திய மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் அமைகிறது. ஆனால், தற்போது சாமானிய மக்களின் எட்டாக்கனியாகத் தங்கம் மாறி வரும் நிலையில், தற்போது தங்கத்தில் விலை சிறிதளவு குறைந்துள்ளது.  இன்று சவரன் ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மக்களிடையே சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,700க்கு விற்பனை ஆகிறது. அதாவது  ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.145 குறைந்து ரூ.6,700க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.86.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.