சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு! வேகம் அதிகரிப்பு!!

Must read

சென்னை:
தர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதிய கால அட்டவணையின்படி 88 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயண நேரம் 20 முதல் 90 நிமிடங்கள் வரையில் குறையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி தெரிவித்துள்ளார்.
train1 தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி கூறியதாவது:
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை  இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையில் இந்த புதிய அட்டவணை பின்பற்றப்படும்.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 9 வாராந்திர விரைவு ரயில்கள் 3 வகையான பெயர்களில் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் – ஆமதாபாத் (ஹம்சபர்) வாராந்திர விரைவு ரயில் (புதன்கிழமைகளில்), திருச்சி- கங்கா நகர் வாராந்திர விரைவு ரயில் (வியாழக்கிழமைகளில்) இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் – சந்திர காச்சி இடையே (அந்த்யோதயா) வாராந்திர விரைவு ரயில் (புதன் கிழமைகளில்), எர்ணாகுளம் ஹவுரா இடையே அந்த் யோதயா அதிவிரைவு ரயில் (செவ்வாய்க்கிழமைகளில்) இயக் கப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூ ருக்கு உதய் அதிவிரைவு ரயில் திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும்.
எர்ணாகுளம் – ஹட்டியா இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் (வியாழக் கிழமைகளில்) இயக்கப்படுகிறது. மேற்கண்ட 6 புதிய ரயில்கள் இயக்கம் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இதுதவிர, மற்ற மண்டலங்களில் இருந்து இயக்கப்படும் 3 புதிய வாராந்திர விரைவு ரயில்களும் தெற்கு ரயில்வேயில் கடந்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் வரையில் தினமும் இயக்கப்பட்டு வந்த காக்கிநாடா சர்கார், கச்சிகுடா விரைவு ரயில்கள் செங்கல்பட்டு வரை யில் நீடிக்கப்பட்டு இயக்கப் படுகிறது.
தெற்கு ரயில்வே சார்பில் இயக் கப்படும் 88 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 38 ரயில்கள் 20 நிமிடம் முதல் 60 நிமிடம் வரையும், 7 ரயில்கள் 60 நிமிடம் முதல் 90 நிமிடம் வரையும் விரைவாக சென்றடையும்.
அதிகபட்சமாக, சிலம்பு, ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 90 நிமிட பயண நேரம் குறையும்.
இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்படும், வந்தடையும் 43 ரயில்களின் நேரம் மாற்றப் பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம், எழும்பூர்- ஜோத்பூர் வாராந்திரம், சென்னை சென்ட்ரல் – ஹூப்ளி வாராந்திரம் ஆகிய விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் ராமேஸ்வரம், ஜோத்பூர் 2 ரயில்களும் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் மாற்றப்படும். மற்ற ரயில்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் – பெங்களூர் விரைவு ரயில் 12795/12796-க்கு பதில் 22690/ 22689 ஆக மாற்றப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை – திருவனந்தபுரம் ஏசி வாராந்திர விரைவு ரயில் காட்பாடி மற்றும் ஈரோட்டில் நிரந்தரமாக நின்று செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
மேலும்,  தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்களின் புதிய கால அட்ட வணை  இன்று முதல்  நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும் ஏற் கெனவே, பயணத்தை திட்ட மிட்டு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்களின் நேர மாற்றம், ரயில் எண் மாற்றம் உள்ளிட்ட புதிய தகவல்களை பதிவு செய்யப்பட்டுள்ள பயணி களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்ப ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது புதிய பாதைகள் நிறைவடைந் துள்ளன. இதேபோல், கடற்கரை தாம்பரம் – செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில் கால அட்டவணை மாற்றிய மைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அடுத்த 2 மாதங்களில் மின்சார ரயில் களின் புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
புதிய கையேடுகள் இன்று முதல் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கையேடு விலை ரூ.35 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article