சென்னை: பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி பயணிகளின் வசதிக்க  தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி, ஜனவரி 12-ம் தேதி இரவு 9.45மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த  அதிவிரைவுசிறப்பு ரயில் (06001) மறுநாள் காலை 8.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வரும் 13-ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 13-ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து வரும் 14-ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06006) மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

நாகர்கோவிலில் இருந்து வரும் 16-ம் தேதி மாலை4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வரும் 17-ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து வரும் 16-ம் தேதி இரவு 7 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06040) மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வரும் 17-ம் தேதிகாலை 10.45 மணிக்கு புறப்படும்சிறப்பு ரயில் (06039) அதேநாளில் இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில் விபரம், முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.