சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதற்கான முழு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தாம்பரம் நாகர்கோவில், நாகர்கோவில் மங்களூரு, சென்னை பெங்களுரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, வரும் 13ஆம் தேதி)திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. இதனால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 10-ஆம் தேதி 7.30 மணிக்கு ரயில் புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயின் எண் (06061) இந்த ரயிலானது செங்கல்பட்டு விழுப்புரம் மதுரை விருதுநகர் திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை அடுத்த நாள் காலை 7. 10 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல நாகர்கோயில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. வருகின்ற 11ஆம் தேதி இந்த ரயில் மதியம் 2. 45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலானது (வண்டி எண் 06062 )திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருச்சூர் வழியாக மங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை 5. 15 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது.
இதே போல மங்களூரில் இருந்து தாம்பரத்திற்கும் பண்டிகை கால சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06063) இயக்கப்படுகிறது. மங்களூருவில் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நாள் காலை 5. 10 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது.இந்த ரயில்களில் ஏசி 2 டயர் ஒரு பெட்டியும் ஏசி 3 டயர் 6 பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி 9 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06083) நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும். அதாவது இந்த ரயில் நவம்பர் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண் 06084) பெங்களூரில் இருந்து புதன்கிழமைகள் தோறும் மூன்று வாரங்கள் இயக்கப்படும்.
அதாவது, நவம்பர் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். இந்த ரயிலில் 1 ஏசி 2-டையர் கோச், 3 ஏசி 3-டையர் கோச், 10 ஸ்லீப்பர் இரண்டாம் வகுப்பு கோச், 2 ஜெனரல் கோச் இருக்கும். இவை தவிர 2 லக்கேஜ் பெட்டிகளும் இருக்கும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ‘ஏ’, பங்காரப்பேட்டை, கிருஷ்ணாஜபுரம், பெங்களூரு கண்டோன்மெண்ட் மற்றும் பெங்களூரு சிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.