சென்னை: உட்கார்ந்து செல்லும் 2வது வகுப்பு பெட்டிகளில் இனிமேல் முன்பதில்லாமல் பயணிகள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரயில்களை இயக்கி வந்த ரயில்வெ, கடந்த சில மாதங்களாக பழைய முறையிலான ரெகுலர் ரயில்களை இயக்கி வருகிறது. இருந்தாலும், பல ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான முழு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதையடுத்து, பயணிகள், முன்பதில்லா பெட்டிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து,  பயணிகளின் கோரிக்கையை ஏற்று, 2வது வகுப்பு உட்கார்ந்து செல்லும் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,  41 ரயில்களில் அமர்ந்துசெல்லும் வகையிலான இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.