சென்னை:  நாளை முதல் (அக்டோபர் 1ஆம் தேதி), நெல்லை,  பாண்டியன், பல்லவன், வைகை உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி சில ரயில்களின் புறப்படும் நேரம் மற்றும் சேரும் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.

ரயில் நேரம் மாற்றம் – முழு விவரம்

வண்டி எண் 02637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 04.05, 04.18, 04.30 மணிக்கு பதிலாக அதிகாலை 03.55, 04.07, 04.17 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 07.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து காலை 08.00 மணிக்கு பதிலாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.

வண்டி எண் 06729 மதுரை – புனலூர் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.42, அதிகாலை 03.10, காலை 09.00, 09.11, 09.22, 09.30, 09.40 மணிக்கு பதிலாக இரவு 11.38, அதிகாலை 02.45, காலை 08.45, 08.55, 09.05, 09.15, 09.24 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06730 புனலூர் – மதுரை சிறப்பு ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.45 அதிகாலை 03.40 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06064 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06066 நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06065 தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களிலிருந்து முறையை அதிகாலை 01.40, 05.35 மணிக்கு பதிலாக அதிகாலை 01.35, 05.25 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06191 தாம்பரம் – நாகர்கோயில் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 07.50, 09.45, 10.30, பகல் 11.15, 12.40 மணிக்கு பதிலாக காலை 07.40, 09.00, 09.55, பகல் 11.05, 12.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06192 நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 07.25 மணிக்கு பதிலாக அதிகாலை 05.50 மணிக்கு சென்று சேரும்.

வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலைகளிலிருந்து முறையே அதிகாலை 04.40, 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.38, 05.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06787 திருநெல்வேலி – ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா சிறப்பு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு பதிலாக இரவு 07.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி சிறப்பு ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே மதியம் 02.10, 02.30 மணிக்கு பதிலாக மதியம் 02.00, 02.25 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல்நேர சிறப்பு ரயில் கோவில்பட்டி, மதுரை, சோழவந்தான், அம்பாத்துரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 10.00, பகல் 12.05, 12.25, 13.05, 13.30 மணிக்கு பதிலாக காலை 09.55, பகல் 12.00, 12.20, 12.53, 13.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மதியம் 01.30, 01.45, 01.55, 02.10, 02.20, 02.53, மாலை 06.05 மணிக்கு பதிலாக மதியம் 01.25, 01.37, 01.45, 02.00, 02.35, 02.50 மாலை 06.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் அனந்தபுரி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 05.00, 05.25, காலை 07.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.58, 05.20, காலை 07.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 03.35, 03.43, 04.10, 04.45, 05.35, காலை 06.10, 06.25, 06.33, 06.50, 07.05, 07.30, 07.44, 07.55 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30, 03.38, 04.05, 04.40, 05.20 காலை 06.00, 06.16, 06.25, 06.40, 06.55, 07.20, 07.35, 07.50 மணிக்கு புறப்படும்

வண்டி எண் 02661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே அதிகாலை 04.45, 05.45, காலை 06.01, 06.10, 06.25, 06.40, 07.05, 07.18, 07.30, 07.50 மணிக்கு பதிலாக அதிகாலை 04.30, 05.15, 05.35, 05.42, 05.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.05 மணிக்கு பதிலாக இரவு 11.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 09568 ஓகா – தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 10.15, 11.15 மணிக்கு பதிலாக இரவு 10.05, 11.00 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 09567 தூத்துக்குடி – ஓகா சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு பதிலாக அதிகாலை 04.40 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 03.50, 04.30, 04.38, 04.50, 05.12, காலை 07.32 மணிக்கு பதிலாக அதிகாலை 03.45, 04.15, 04.23, 04.33, 04.45, காலை 07.25  மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06794 பைசாபாத் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 01.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 12.05, 01.15, 01.50, 02.15, 02.30, 02.55, 04.15, 06.50, 07.04, 07.15, 07.25 மணிக்கு பதிலாக இரவு 11.40, நள்ளிரவு 12.45, அதிகாலை 01.30, 02.10, 02.25, 02.50, 03.50, காலை 06.00, 06.11, 06.21, 06.32 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு பதிலாக இரவு 09.50 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06126 காரைக்குடி – திருச்சி டெமு சிறப்பு ரயில் புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர், குமாரமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.50, 08.03, 08.15, 08.30 மணிக்கு பதிலாக காலை 07.45, 07.58, 08.10, 08.25 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.