சியோல்: தென்கொரியாவில் மே 6ம் தேதி முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படுகின்றன.
அப்போது முதல், வணிக நடவடிக்கைகள் கட்டங்களாக அனுமதிப்படவுள்ளன. தென்கொரியாவில், கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட, அதன் தீவிரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டுப் பிரதமர் சுங் சே-கியூன் கூறியதாவது, “தற்போது வரை முடக்கப்பட்டுள்ள வணிக நடவடிக்கைகள் படிப்படியாக தொடங்குவதற்கு அனுமதிக்கப்படும் மற்றும் கூடுகை நிகழ்வுகள் நோய் தொற்றா விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
சீனாவின் அண்டை நாடாக இருந்தாலும், கொரோனா விஷயத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, பலி எண்ணிக்கையையும் கட்டுக்குள் கொண்டு வந்தது அந்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.