சென்னை:  மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில்,  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  பேய்மழை கொட்டியது.  இதனால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்து மக்ள வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடத்து, அங்கு  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் களத்தில் நின்று மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பி முதலமைச்சர் ஸ்டாலின்,  மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,  அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் , மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து  கேட்டறிந்தார்.