ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கான துவக்கம் சரியாக அமையவில்லை.
ஆனால், கிளாசன் 123 ரன்களையும், டேவிட் மில்லர் 64 ரன்களையும், கைல் 48 ரன்களையும் அடித்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை அடித்தது.
பின்னர், 292 ரன்களை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அதிபட்சமாக 76 ரன்களை அடித்தார். மார்னஸ் லபுஷனே 41 ரன்களையும், வார்னர் 25 ரன்களையும் அடித்தனர்.
மொத்தம் 45.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜே மற்றும் ஷாம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்க அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.