மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நாடல், 35வது இடத்திலுள்ள டெய்லர் பிரிட்ஸை(அமெரிக்கா) சந்தித்தார்.

மொத்தம் 1 மணிநேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் வென்றார் நாடல்.

இந்த ‍வெற்றியின் மூலம், மெக்சிகோ ஓபன் பட்டத்தை மூன்றாவது முறையாக தனதாக்கினார். இது நாடல் கைப்பற்றும் 85வது பட்டமாகும்.

இதன்மூலம், ஏடிபி அரங்கில், ஒற்றையர் பிரிவில் அதிகப் பட்டங்களை வென்ற வீரர்கள் வரிசையில் இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ்.