வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தனது இண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா, தற்போது 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து தரப்பில் பதிலாக 235 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர், வெறும் 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி, சுதாரித்து ஆடவில்லை. அப்படியே சரியத் தொடங்கியது.

பிரித்விஷா, புஜாரா மற்றும் விராத் கோலி ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். தற்போது விகாரியும், ரிஷப் பன்ட்டும் களத்தில் உள்ளனர்.

தற்போது வெறும் 2 நாள் ஆட்டம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமிருப்பதால், இந்திய அணி இன்னும் சற்று கணிசமான ரன்களை எடுக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்திய அணி 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.