மிசெளரி: அமெரிக்காவில் நடைபெற்றுவரும் செயின்ட் லூயிஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்திய நட்சத்திரம் கோனேரு ஹம்பி வெற்றிபெற்றார்.

அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இத்தொடரில், உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இத்தொடரின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா என்ற வீராங்கனையை சந்தித்தார். இப்போட்டியில் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கினார் ஹம்பி.

மும்முரமாக நடைபெற்ற இப்போட்டியின் 61வது நகர்த்தலில் வெற்றியை தனதாக்கினர் ஹம்பி. தற்போதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் ஹம்பி 4.0 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறினார்.

சீனாவின் ஜூ வென்ஜுன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் ஹரிகா 6வது இடத்திலும் நீடிக்கிறார்.