தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது B.1.1.529 என்று இதனை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

இதுவரை 22 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

இரண்டாவது அலையில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய பீட்டா வகை கொரோனா வைரஸ் முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் தோன்றியது என்பதால், இந்த புதிய வகை வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

தற்போது வரை B.1.1.529 குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இதுகுறித்த முழுமையான தரவுகள் ஆய்வில் உள்ளது, இருந்தபோதும் பீட்டா வகை போன்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் விஞ்ஞானிகள் கவனமாக இருக்கின்றனர்.