இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவாகிறது.
சவுரவ் கங்குலியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை கங்குலி இவற்றை மறுத்து வந்திருந்தார். தற்போது சம்மதித்திருப்பதாக அவரே தெரிவித்துள்ளார் .
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருப்பதாகக் கூறப்படும் இந்த பயோபிக்கில் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.