குஜராத்தில் சோகம்: பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 220 பேர் பலி!

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 220 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக  2095 பேர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், இதில் 746 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மீதியுள்ள  1129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர்  இறந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுவரை குஜராத்தில் பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது என குஜராத் மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அங்கு மேலும் 220 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் 91 பேருக்கும், வதோராவில் 31 பேருக்கும், சூரத்தில் 15 பேருக்கும் இந்த நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோய் பரவுவதை தடுக்க குஜராத் அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
English Summary
Sorrow in Gujarat: 220 people killed in swine flu