ஸ்ரீரங்கம்:
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடந்து வருகிறது. திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணியளவில் நடந்தது. இரவு முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பக்தி பரவசத்துடன் இறைவனின் திருநாமத்தை சொல்லி கோஷமிட்டனர்.

தமிழகத்தின் மற்ற வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் இன்று (ஜன.,02) அதிகாலை 4: 30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது, மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட முக்கிய தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து வழிபட்டனர்.