சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று.
இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் 30-ம் தேதி திட்டமிட்டபடி சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் சூரரைப்போற்று படக்குழு இன்னும் பெறவில்லை என்றும் அதனால் இந்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கான அமேசான் பட்டியலில் இருந்தும் சூரரைப் போற்று திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.