பெங்களூரு

ர்நாடக  மாநிலத்தில் யார் முதல்வர் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.   ஏற்கனவே கருத்துக் கணிப்புகளின்படி இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றாகும்.   ஆனால் அண்மையில் ஒரு சில முடிவுகள் தொங்கு சட்டசபை அமையலாம் எனவும் இதனால் ம ஜ த கட்சிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அழைக்கும் எனவும் கூறப்பட்டது/

அவற்றை எல்லாம் பொய்யாக்கி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர்.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “இது தவறான பாஜக அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி;  இங்கு வந்த பிரதமர் மோடி, அமித்ஷா, பல பாஜக முதலமைச்சர்கள் தங்களின் முழு பலத்தைக் காட்டினர்; ஆயினும் மக்கள் பாஜகவைத் தூக்கி எறிந்துவிட்டனர்.

விரைவில் காங்கிரசின்  மேலிடப் பொறுப்பாளர்கள் பெங்களூரு வந்து அடுத்த முதலமைச்சரைத் தேர்வு செய்வார்கள்”எனத் தெரிவித்துள்ளார்.