டில்லி

ம் ஆத்மி கட்சி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம் முந்தைய காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார்.   இவர் இன்று டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் ப சிதம்பரம், ”முகத்துக்கு நேராகப் புகழ்வதின் சிறந்த வடிவம் பிரதிபலிப்பு ஆகும். அவ்வகையில் பாஜகவைப் போல் ஆம் ஆத்மி கட்சியிலும் அதிகம் பிரதிபலிப்பு உள்ளது.  விரைவில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் இன்னொரு பிரதியாக மாறும்.

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்டில் 3 முதல்வர்கள் மாறி விட்டனர். ஆயினும் எந்த வளர்ச்சியும் இல்லை.  பாஜகவினர் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் வளர்ச்சி இன்று தொடங்குவதாக அறிவித்தார்கள்.  ஆனால் அடிக்கல் மற்றும் பலகைகளைத் தவிர வேறு ஏதும் அங்கு இல்லை

உத்தரகாண்டில் ரூ.15,728 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் ரூ.2,573 கோடி மதிப்பில் 7 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடை பெறும் நிலையில் விரைவாகத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து அடிக்கல் நாட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.