திருநெல்வேலி

ல்வியை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள உக்ரைன் மாணவர்கள் கலவியைத் தொடர விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தி விட்டு இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.  இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவ கல்வி மாணவர்கள் ஆவார்கள்.  இவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை  எடுத்து வருகின்றன.

தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை உக்ரைனில் இருந்து வந்துள்ள மாணவர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.  திருநெல்வேலியில் நடந்த இந்த சந்திப்பில் மாணவர்கள் தங்களைப் பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.  மேலும் தங்கள் கல்வியைத் தொடர உதவுமாறும் அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். “உக்ரைன் போரின் காரணமாக  ஏராளமான தமிழக மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ளனர்.  அவர்களின் கவ்லியைத் தொடர விரைவில் நல்ல முடிவுகள் எடுப்பேன்” என உறுதி அளித்துள்ளார்.   இது உக்ரைன் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.