கிருஷ்ணகிரி

ணையம் மூலம் ஒரு இளைஞரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.70000 ஐ தமிழக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தனேஸ்வர் என்னும் இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார்.  இணையம் மூலம் இவரைத் தொடர்பு கொட ஒரு மர்ம நபர் அதிக லாபம் அளிப்பதாக ஆசை வார்த்தை காட்டி ரூ.70000 பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடர்.  எனவே இது குறித்து இளைஞர் தனேஸ்வர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் உடனடியாக மோசடி செய்த நபரின் வங்கிக் கணக்கை முடக்கி உள்ளனர்.  அதில் இருந்து ரூ.70000 பணத்தை தனேஸ்வரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் சாய் சரன் தேஜஸ்வி வழங்கி உள்ளார்.

அப்போது அவர்,

”ஏற்கனவே அறிமுகம் இல்லாத நபர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண், ஓடிபி எண் உள்ளிட்டவை கேட்டால் கொடுக்க வேண்டாம்.  இணைப்பு எதுவும் வந்தால் அதனைத் தொடாமல் தவிர்க்க வேண்டும். போலியான இணையம் லோன் ஆப் பதிவிறக்கம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரக்கூடிய வாட்ஸ் அப் வீடியோ கால்களைப் புறக்கணிக்க வேண்டும்.”

என அறிவுறுத்தி உள்ளார்.