டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், மனைவியுமான சோனியாகாந்தி, அவரது மகள்  பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான  மே 21ஆம் தேதி நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக  அனுசரிக்கப் படுகிறது. அவர் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரிலும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையட்டி டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தனது தந்தையின் நினைவுநாளையொட்டி, அவரை நினைவு கூர்ந்து ராகுல்காந்தி டிவிட்டரில் உருக்கமான பதிவும் வெளியட்டுள்ளார்.  அவரை இழந்து வாடும் நான், இந்த வேளையில் அவருடன் நாங்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தை எண்ணி நினைத்து பார்க்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

31வது நினைவு நாள்: தந்தை ராஜீவ் நினைவுநாளை வீடியோவுடன் நினைவுகூர்ந்த ராகுல்காந்தி….