“நிரந்தர தலைவர் தேர்வுசெய்யப்படும் வரை சோனியா காந்தியே தலைவராக தொடர்வார்”

Must read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் முறைப்படி தேர்வுசெய்யப்படும் வரை, சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர்வார் என்று அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நாள் தொலைவில் இல்லை. விரைவிலேயே தேர்வு செய்யப்படுவார்.

இடைக்கால தலைவராக ஓராண்டு காலத்திற்கு தேர்வுசெய்யப்பட்ட சோனியா காந்தியின் பதவிகாலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், நிரந்தர தலைவர் தேர்வுசெய்யப்படாத சூழலில், தற்காலிக தலைவர் பதவி தானாகவே காலாவதியாகும் என்பதாக பொருள் இல்லை.

முறையான நடைமுறையில், நிரந்தர தலைவர் கட்சிக்கு தேர்வு செய்யப்படும்வரை, சோனியா காந்தியே தலைவராக தொடர்வார். தலைவர் செயல்பாடு விரைவில் நடக்கும்” என்றார் அவர்.

 

More articles

Latest article