டில்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது.

இதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த சோனியாகாந்தி இன்று இரவு ரஷ்யா புறப்பட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மாஸ்கோ செல்லும் அவர், பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

சோனியா காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ரஷ்யா செல்கின்றனர்.