மநகூ கட்சிகள் சில திமுக கூட்டணிக்கு  வரும்: ப.சிதம்பரம்

Must read

a
சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்ததாவது:
“வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. – அ.தி.மு.க. அணிகளுக்கு போட்டி நிலவுகிறது.  மக்கள் நலக்கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு கிடையாது.  ஆற கட்சிகள் உள்ள அந்த கூட்டணி, ஆறு இடங்களில் வெற்றி பெற்றாலே அதிகம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனியாகவே   அறுதி பெரும்பான்மை பெறும்.  அல்லது திமுக காங்கிரஸ் கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெறும். ஆனாலும் கூட்டணி ஆட்சி இருக்கும் என்று நினைக்கவில்லை. தவிர அது பற்றி கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு, தற்போது ம.ந.கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வரக்கூடும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

More articles

Latest article