சிறிசேனவுக்கு மோடி விருந்து: மறுநாளே தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!

Must read

b
 
சென்னை: தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்களை  இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியது.
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த  மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
சமீபத்தில்  வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐவரை விடுதலை செய்ய வைத்தது எனது தலைமையிலான மத்திய பாஜக அரசுதான்” என்று பேசினார்.
aஇந்த நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியிருக்கிறது. மோடியின் பேச்சினால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படை இச் செயலில் ஈடுபட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதோடு,  இந்தியாவுக்கு வருகை தந்த  இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்து வைத்த நிலையில்  இன்று தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article