சென்னை:  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 40 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. 

தமிழ்நாட்டில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த திட்டத்தின்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், தேவையான மருந்துகளுடன்  பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று சேவைகள் செய்து வருகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்ட பிரஷர் மற்றும் சுகர் நோயாளிகளுக்கான தேவையான மருந்துகளை வழங்கி வருகின்றனர். மேலும்,  டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்ததிட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த  தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இநத நிலையில், இந்த திட்டத்தின்படி, இதுவரை  40 லட்சத்து 9 ஆயிரத்து 643 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், Repeat service என்கிற வகையில் மறு சிகிச்சையால் பயன் அடைந்தோர் எண்ணிக்கை 19,01,471ஆக உயர்ந்துள்ளது. இரு பெரும் மருத்துவ திட்டங்கள் மூலம் மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் அளித்துள்ளது.