சமூக விலகல்? செல்போன் கடைகளில் மக்கள் கூட்டம்…

Must read

சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று செல்போன் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் கடைகளில் குவிந்தனர். இதனால் சமூக விலகல் கேள்விக்குறியானது.

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே  முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு  மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  ஆனால், தற்போதும் தமிழகத்தில் சென்னை உள்பட  பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறையாததால்,  ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல கடைகள் திறப்பது உள்பட  பல பணிகளுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
40 நாட்களுக்கு பிறகு செல்போன் கடைகள் உள்பட பல கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் செல்போன் கடைகளில் குவிந்தனர். பொதுவாகவே செல்போன் கடைகள் சிறிய அளவில் இருக்கும் நிலையில், ஒரே சமயத்தில் பலர் கடைகளுக்கு சென்றதால், சமூக விலகல் கேள்விக்குறியானது.
ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்த நிலையில், கொரோனா பரவலும் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டையில்  இன்று காலை கடைகள் திறந்தவுடன் செல்போன்களை பழுது பார்க்கவும் புதிதாக செல்போன் வாங்கவும் இதர சேவைகளை பெற்றுக்கொள்ளவும் அதிகமாக மக்கள்  குவிந்தனர்.

More articles

Latest article