டில்லி

நேற்று வரை இந்தியாவில் 18,57,65,491 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

கொரோனா  பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை இங்கு 1,05,43,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் 1.01 கோடிக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2.12 லட்சத்துக்கும் அதிமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு இதுவரை சரியான சிகிச்சை முறை கண்டறியாததால் உலகெங்கும் சோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய முறை கையாளப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

இதுவரை இந்தியாவில் 18,57,65,491 மாதிரிகள் கொரோனாவுக்காக பரிசோதிக்கப்ப்பட்டுள்ளன.  நேற்று ஒரே நாளில் 8,03,390 மாதிரிகள் பரிசோதிக்கப்பாட்டுள்ளன.  இதில் நேற்று தமிழகத்தில் 55,487 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன்.  இதுவரை 1,51,24,787 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.