சென்னை: தடுப்பூசி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு இதுவரை வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசி எவ்வளவு, தமிழகஅரசு கொள்முதல் செய்துள்ளது எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது 2வது அலை பரவி பெரும் உயிரிழப்புகளுடன் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தொற்று பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் என உலக நாடுகள் முடிவு செய்து, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. அதுபோல, இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. ஆனால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்படு எழுந்துள்ளது.
இருந்தாலும் இதுவரை23,61,98,726 பேருககு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.ஆனால் நாட்டில் நாட்டில் தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பற்றாக்குறை அடுத்த ஒருசில மாதங்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும், கொரோனா 3வது அலை பரவலுக்கு முன்பு அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுப்பிய தடுப்பூசிகளில் விவரங்களும், தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் கிடைத்துள்ள தடுப்பூசி டோஸ்கள் விவரம்…
கோவிஷூல்டு – 73,63,150 டோஸ்
கோவாக்ஸின் – 14,90,540 டோஸ்
மொத்தம் – 88,53,690 டோஸ்
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் கீழ்
கோவிஷூல்டு – 11,18,530 டோஸ்
கோவாக்ஸின் – 1,91,740 டோஸ்
மொத்தம் – 13,10,270 டோஸ்
இரண்டு ஒதுக்கீட்டும் சேர்த்து மொத்தம் : 1,01,63,960 டோஸ்.
இந்த மாதம் (ஜூன்) மேலும் அதிக அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.