சென்னை

துவரை தமிழகத்தில் டெல்டா பிள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது.  தற்போது அது டெல்டா பிளஸ் என மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது.   கடந்த மே மாதம் தமிழகத்தில் இருந்து 1,159 மாதிரிகள் எடுக்கப்பட்டு பெங்களூரு அனுப்பப்பட்டு அங்கிருந்த ஆய்வகத்தில் மரபியல் சோதனை நடத்தப்பட்டது.  அதில் சென்னையில் ஒருவரும் டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி ஆனது.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆயினும், டெல்டா பிளஸ் வகை திரிபு குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அரசு இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

தற்போது தமிழ்நாட்டில் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடெங்கும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 20 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.