சென்னை: தமிழ்நாட்டில் சுமார் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 7 லட்சம் பேர் மட்டுமே இதுவரை (டிசம்பர் 31) விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி முதல் ஒரு மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல ல், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. எஸ்ஐஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். , தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை பெயர்களை இணைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான ஆவணங்களும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, டிசம்பரில் தொடங்கிய புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி வருகிற ஜன. 18 வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 7,37,807 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 9,535 பேரை நீக்க விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது . அதேபோல வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விட்டுப் போனவர்கள், நீக்கப்பட்டவர்களுக்கு டிச. 27, 28 தேதிகளைத் தொடர்ந்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]