Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கொரோனா: சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்

Sep 10, 2020
சென்னை: கொரோனா தொற்று சோதனையாக, சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,  அடையாறு, அண்ணாநகர், தேனாம்பேட்டையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
கடந்த மே மாதம் 5ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி (நேற்று) வரை   23,67,786 பேர்  காய்ச்சல் சோதனை முகாமில் கலந்துகொண்டனர், அவர்களில்  1,38,731 பேருக்கு தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு மற்ற நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்ட தாகவும், சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.
நேற்று மட்டும், சென்னை முழுவதும்  460 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 22 ஆயிரத்து 820 பேர் கலந்துகொண்டனர். இதில் 1312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பாதிப்பு அதிகம் உள்ள அண்ணாநகர் மண்டலத்தில் 44 முகாம்களும், தேனாம்பேட்டையில் 51 முகாம்களும், அடையாறில் 42 முகாம்களும் நடந்துள்ளன.

பாதிப்பு குறைவாக இருக்கும் தண்டையார் பேட்டையில் 39, ராயபுரம் 33, திரு.வி.க.நகர் 38, அம்பத்தூர் 33, ஆலந்தூர் 34, கோடம்பாக்கம் 36 முகாம்கள் நடந்துள்ளது. தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதால் காய்ச்சல் முகாம்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. தற்போது 11 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் அதிகபட்ச மாக 7 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

கண்ணப்பசாமி நகர் 22-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெரு, ஐயப்பன் நகர் 3-வது கிராஸ் தெரு, வாசுதேவன் கார்டன், வ.உ.சி.தெரு, ஏழு மலைநகர், பி.ஆர்.எச். ரோடு ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டையில் 2 இடங்களும், வளசரவாக்கம், சோழிங்கநல்லூரில் தலா 1 இடமும் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது.

15 மண்டலங்களில் 4 மண்டலத்தில் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 11 மண்டலங்கள் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

இந்தியாவில் புயல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 95,735 பேர் பாதிப்பு…
10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer