சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக  நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதை மீறி வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து,  இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  ஆனால்,  ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், பலர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி,  2லட்சத்து 5ஆயிரத்து 54 பேர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றுள்ளதாகவும் அவர்கள்மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், 2லட்சத்து18ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து   இதுவரை 98லட்சத்து 7ஆயிரத்து 394 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.