மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலையொட்டி தொடங்கும் நிலையில், போட்டியில் பங்கேற்க 12,176 காளைகளும், 4,514 காளையர்களும் (மாடுபிடி வீரர்கள்) பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போன மதுரையில், பொங்கலையொட்டி போட்டிகள் தொடங்குகின்றன. பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் தேதி பாலமேட்டிலும், வரும் 17ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்களில் பங்கேற்கும் காளைகள் மற்றும் காளையர்கள் பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கி நரடைபெற்று வருகிது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய madurai.nic.in என்ற இணையதளத்தில் 12ந்தேதி வரை முன்பதிவு செய்யலாம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 12,176 காளைகள், 4,514 மாடுபிடி
இதுகுறித்து செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,176 காளைகள் மற்றும் 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், அலங்காநல்லூர் 6,099, பாலமேடு 3,677, அவனியாபுரம் 2,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று, அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேட்டில் 1,412, அவனியாபுரத்தில் 1,734 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அலங்காநல்லூரில் அரங்கம் திறக்கப்பட்ட பின் அடுத்த 5 நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தற்போதே தங்கள் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா அமைப்பாளர்களும் போட்டிகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைத் தொடங்கியுள் ளனர்.