சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, செப்டம்பர் 15ந்தேதி தொடங்குகிறது. இந்த திட்டதிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயனர்களை தேர்வு செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்படும் பயனர்களுக்கு மாதம் தோறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஒரு கோடி பெண்களுக்கு இந்த உதவி தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விண்ணப்படிவங்க,ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களையும் விநியோகித்தனர். இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகள் அருகே விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. விண்ணப்பம் பெற்றவர்கள் டோக்கனில் கொடுக்கப்பட்ட இடம், நாள் தகவலின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொண்டனர். இதற்கான முகாம்கள் ஜூலை24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற்றது., 2ஆம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16ஆம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது, அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால். 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.