சென்னை: கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ எனப்படும் பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌. மறைந்த திமுக அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று  திறந்து வைக்கிறார்.

மறைந்த  பேராசிரியர்‌ க. அன்பழகன்‌ 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்‌, 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம்‌ ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்‌ தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்‌ திறம்படப்‌ பணியாற்றியுள்ளார்‌.  கலைஞர்‌ கருணாநிதி முதலமைச்சராக  பொறுப்பேற்ற காலகட்டத்தில் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும்‌ கல்வித்‌ துறை அமைச்சராக பணியாற்றினார்‌. அத்துடன் 40க்கும்‌ மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்‌.

அவரை போற்றும் வகையில், சென்னை காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள கல்வித்துறை வளாகமான டிபிஐ வளாகத்தை பேராசிரியர் அன்பழகன் வளாகம் என கடந்த ஆண்டு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வளாகத்தில் பேராசிரியர் சிலை நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், , தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ இன்று காலை 10.00. மணியளவில்‌ சென்னை, நுங்கம்பாக்கம்‌ பேராசிரியர்‌ அன்பழகன்‌. கல்வி வளாகத்தில்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர்‌ க.அன்பழகன்‌  திருவுருவச்‌ சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலையினை  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பிக்கிறார்.