சென்னை: உணவகங்கள், தாபாக்களில் உரிமம் பெறாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்றுவதில் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மதுபானக் கடைகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து வருவதுடன்,. குறிப்பிட்ட நேரத்தை விட 24மணி நேரம் மது விற்பனை செய்யப்படும் அவலமும் தொடர்கிறது. இதற்கிடையில், திருமணம் மற்றும் விருந்து போன்ற நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்ய ஆலோசிப்பதாக கூறியதுடன், குடிகாரர்களின் கோரிக்கையை ஏற்று காலையிலேயே மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், “இனி உரிய அனுமதி பெறாமல் உணவகங்கள், தாபா உள்ளிட்ட சிறு கடைகளில் மதுவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. (இதுவரை, உரிமம் பெறாமல் மது விற்பனை நடைபெற்று வருவது உண்மையாகி உள்ளது). மேலும், உரிமை பெறாத வேறு இடங்களிலும் மதுபான விற்பனை செய்தால், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபானம் விற்க தமிழ்நாடு மதுபானம் விதிகளின் கீழ் மதுபான விற்பனை தொடர்பாக உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்ய உரிமம் பெற்றால் போதும், எங்கும் விற்பனை செய்யலாம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது.