இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை சினேகா குடும்பத்தோடு லண்டனுக்கு சுற்றுலா சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், சினேகா, விஹான் இருவரும் 2 விரல்களை காட்டியபடி இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் , 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது விஹானுக்கு 4 வயதாகிறது. இதையடுத்து, சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் செய்தியுடன் வளைகாப்பு புகைப்படங்களும் வெளியானது.