இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஈஷா ரெப்பா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மதுமிதாவின் இந்த பதிவை ட்வீட் செய்திருந்த சாக்‌ஷி, உங்களது இந்த ட்விட் பதிவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் மதுமிதா, சாக்‌ஷி என்பது குறிப்பிடத்தக்கது .